அரிசி, உளுந்து இல்லாமல் பஞ்சு போல் பன் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
Advertisment
தேவையானவை
எண்ணெய் சீரகம் கடுகு உளுந்தம்பருப்பு பெருங்காயம் ரவை பச்சை அரிசி புளித்த தயிர்
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இப்போது வெங்காயமும் சேர்க்கவும். வதங்கியதும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக ரவை எடுத்து மிக்ஸியில் போட்டு பச்சை அரிசி மாவு சேர்த்து புளித்த தயிர், தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை பாத்திரத்தில் மாற்றி ஏற்கனவே வதக்கி பொருட்களை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும். 10 நிமிடத்திற்குப் பின், சோடா சேர்த்து கலக்கவும்.
அடுத்தாக அடுப்பில் தாளிப்பு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நாம் தயாரித்து வைத்த மாவு ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான மிருதுவான பன் தோசை ரெடி.