Advertisment

வீடே கம கம மணம்; சிம்பிள், சத்தான பருப்பு ரசம்: இந்த ஸ்டைலில் செய்து பாருங்க

பருப்பு ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Rasam Recipe

சுவையான கம கம பருப்பு ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா – ¾  டீஸ்பூன்
சீரகம் – ½  டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு 
தக்காளி – 2  
புளி – நெல்லிக்காய் அளவு
பூண்டு பற்கள் தோலுடன் – 5

தாளிக்க தேவையானவை 

நெய்
கடுகு, பெருங்காயம்
கறிவேப்பிலை சிறிதளவு
மல்லித்தழை ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 

செய்முறை 

முதலில் துவரம் பருப்பு, தனியா, சீரகம், காய்ந்த கறிவேப்பிலை இவைகளை பச்சையாக பொடித்து எடுக்கவும். 

புளியை உப்புடன் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுக்கவும். இப்போது அதில் தக்காளி பிசைந்து விட்டு மஞ்சள் தூள், இடித்த பொடியையும் போட்டு, பூண்டை தட்டிப் போட்டு விடவும். 

இப்போது கடாயில் நெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், பச்சை கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து புளி தண்ணீர் கலவை சேர்த்து கொதிக்க விடவும். தேவை என்றால் உப்பு சேர்க்கலாம். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கினால் கம கம பருப்பு ரசம் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment