கஞ்சி காய்ச்சாமல், மாவு அரைக்காமல் ரேஷன் கடை புழுங்கல் அரிசியில் சுலபமான முறையில் வத்தல் செய்வது எப்படி என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரேஷன் கடையில் இருந்து வாங்கிய புழுங்கல் அரிசி கொண்டு சுவையாக வத்தல் செய்ய முடியும். இதனை செய்வதற்கு கஞ்சி காய்ச்சுவது, மாவு அரைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
Advertisment
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி, கல் உப்பு, எள், பெருங்காயம், சீரகம், பச்சை மிளகாய்.
செய்முறை:
Advertisment
Advertisements
இரண்டு கிளாஸ் அளவிற்கு ரேஷன் புழுங்கல் அரிசியை சுத்தப்படுத்தி அளந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த அரிசியை சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது, அரிசி அளந்து எடுத்த அதே கிளாஸ் அளவிற்கு 6 கிளாஸ் தண்ணீரை குக்கரில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த தண்ணீர் நன்றாக குக்கரில் கொதித்து வரும் போது, ஊற வைத்த அரிசியை இதில் சேர்க்க வேண்டும். குக்கரில் அரிசி வேகும் போது, வத்தலுக்கு தேவையான அளவு கல் உப்பு போட்டு, குக்கரை மூடி விடலாம். குக்கரை மூடியதும் 5 விசில் வைத்து அரிசியை வேக வைக்க வேண்டும்.
5 விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, ஒரு மணி நேரத்திற்கு பின்னர் குக்கரை திறக்க வேண்டும். இந்த சாதத்துடன் ஒரு டீஸ்பூன் எள், தேவையான அளவு பெருங்காயம், அரை ஸ்பூன் சீரகம், சிறிதாக நறுக்கிய 5 பச்சை மிளகாய்கள் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
பின்னர், இந்த சாதத்தை மாவு பதத்திற்கு கொண்டு வருவதற்காக, லேசாக தண்ணீர் தொட்டு சமன்படுத்த வேண்டும். இதையடுத்து, சாதத்தின் மீது ஒரு இன்ச் அளவிற்கு நிற்கும் வகையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். மீண்டும் குக்கரை மூடி விட்டு அடுத்த நாள் காலை இதனை திறந்து பார்க்கலாம்.
பின்னர், முறுக்கு குழலில் இந்த மாவு பதத்திற்கு மாறிய சாதத்தை பிழிந்து எடுத்து, ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வத்தல் தயாராகி விடும். இதனை தேவைப்படும் நேரத்தில் எண்ணெய்யில் பொறித்து சாப்பிடலாம்.