அடிக்கிற வெயிலுக்கு ஜில் ஜில் ஃப்ரூட் லஸ்ஸி: சிம்பிள் ரெசிபி இதோ!

சூப்பரான ஃப்ரூட் லஸ்ஸி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

சூப்பரான ஃப்ரூட் லஸ்ஸி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Fruit Lassi

Fruit Lassi

நாளுக்கு நாள் வெயில் கடுமையாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. வெயிலுக்கு இதமாக ஜில்லென சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் குழந்தைகளும் விரும்பும் ஃப்ரூட் லஸ்ஸி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சிம்பிள் ரெசிபி இங்கே.

Advertisment

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு- 1
வாழைப் பழம்- 1
ஆப்பிள்- 1
ஸ்ட்ராபெர்ரி - 4
உலர் திராட்சை - 10
சர்க்கரை - 1 கப்
புளிக்காத தயிர் - 2 கப்
முந்திரி, பாதாம், பிஸ்தா - தேவையான அளவு

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் வாழைப் பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும். ஆரஞ்சை விதை நீக்கி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா பழங்களையும் போட்டு அதனுடன் உலர் திராட்சையையும் கலந்து வைக்கவும். பிறகு தயிர் சேர்த்து கலந்து மிக்ஸியில் போட்டி அரைத்து எடுக்கவும். டம்பளரில் ஊற்றி அதன் மேலே முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி சுவையாக பரிமாறவும். தேவைப்பட்டால் ஐஸ் கட்டி சேர்க்கலாம்அவ்வளவு தான் சிம்பிள், சூப்பரான ஃப்ரூட் லஸ்ஸி ரெடி. இது உடல் சூட்டையும், நீர்க் கடுப்பையும் உடனே தணிக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: