இட்லி, தோசைக்கு சரியான சைட் டிஷ்ஷைத் தேடுகிறீர்களா? புளிப்பு, காரம், உப்பு என அனைத்தும் கலந்து சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு சுவையான பூண்டு தக்காளி சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த சட்னி மிகவும் எளிமையாகச் செய்யக்கூடியது. அதே சமயம், இட்லி மற்றும் தோசைக்கு மிகச்சிறந்த காம்பினேஷனாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று குக்வித் மாம் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
முழு பூண்டு - 1 காய்ந்த மிளகாய் - 10-12 தக்காளி - 1 கொத்தமல்லி புளி உப்பு எண்ணெய் கடுகு, உளுந்து கறிவேப்பிலை
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, கொத்தமல்லி மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய பொருட்களை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் மீண்டும் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து விடவும். கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை சேர்த்து, பின்னர் அரைத்து வைத்த சட்னி விழுதைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் கிளறிவிட்ட பிறகு, எண்ணெய் பிரிந்து வரும். அப்போது பூண்டு தக்காளி சட்னி தயாராகிவிடும். பார்க்கவே நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு இருக்கும்.
இந்த சுவையான பூண்டு தக்காளி சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைத்து மகிழுங்கள். இதை வீட்டிலேயே செய்து பாருங்கள். இனி வீட்டில் இருப்பவர்கள் இந்த ஒரு சட்னியைதான் கேட்பார்கள். மேலும் கூடுதலாக இரண்டு இட்லி சாப்பிடுவார்கள். பேச்சுலர்ஸ் கூட இதை ஈஸியாக செய்து விடலாம்.
எப்போதும் தேங்காய் சட்னி, புதினா சட்னி செய்து ஃபோர் அடித்து விட்டது என்று உணருபவர்கள். ஒருமுறையாவது இந்த மாதிரி பூண்டு தக்காளி சட்னி இப்படி செய்து பாருங்கள். சுவையாக இருக்கும் 2 இட்லி, தோசை சேர்த்து சாப்பிடுவார்கள். சமைக்கும்போதே நாவில் எச்சில் ஊறும். எண்ணெய் மிதக்க மிதக்க இது சுவையாக இருக்கும்.