இன்றைய காலக்கட்டத்தி் சாப்பாடு சமைப்பதற்கு பலரும் குக்கரை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக நகரத்தில், வேலைககு செல்பவர்கள், பேச்சிலர்ஸ் ரூம்களில் சீக்கிரமாக வேலை முடிய வேண்டும் என்பதற்காக குக்கரில் சாதம் செய்து சாப்பிட்டுகின்றனர். அந்த வகையில் குக்கரில் சமைக்கும் பலருக்கும் சாப்பாடு சரியான பதத்திற்கு வருவதில்லை. குழைந்து போயோ அல்லது தண்ணீர் பற்றாமல் அடி பிடித்து போயோ தான் கிடைக்கிறது.
Advertisment
இந்த நிலையில், இது தப்பிக்க, குக்கரில் சரியான பதத்திற்கு சாப்பாடு வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். முதலில் குக்கரை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதில், தேவையான அளவு அரிசி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு டம்பளர் அரிசி எடுத்தால் அதற்கு 2 முதல் இரண்டரை டம்பளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
அதேபோல் பழைய அரிசியாக இருந்தால், 40-45 நிமிடங்கள் அரிசி நன்றாக ஊற வேண்டும். அரிசி எடுக்கும்போது இருக்கும் பழுப்பு நிறம் போய் முழுவதும் வெள்ளை நிறமாக மாறும்வரை அரிசியை நன்றாக ஊறவைக்க வேண்டும். புது அரிசியாக இருந்தால் 20-25 நிமிடங்கள் ஊறினாலே போதுமானது. முதலில் அரிசியை எடுத்துக்கொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை நன்றாக கழுவி அதன்பிறகு ஊற வைக்க வேண்டும்.
அரிசி நன்றாக ஊறியதும், கொடுக்கப்பட்ட அளவில் தண்ணீர் சேர்த்து குக்கரை முடி அடுப்பில் வைக்கவும். கேஸை மீடியம் ஃபிளேமில் வைத்து 3 விசில் வந்தவுடன் எடுக்கவும். இப்போது சாதம் குழையாமல் அடி பிடிக்காமல் உதிரியாக இருக்கும். நீங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“