இந்த இலை 2 மென்று தின்றால் இனிப்பு சுவை தெரியாது... சுகர் இருக்கும் மக்கள் இப்படி யூஸ் செஞ்சு பாருங்க!
சிறுகுறிஞ்சாண் மூலிகையில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கிறது.
சிறுகுறிஞ்சாண் மூலிகையில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் சிறுகுறிஞ்சாண் மூலிகை விளங்குகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் நியூஸ்7 தமிழ் யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வடகிழக்கு ஆஸ்திரேலியா வரை இந்த மூலிகை காணப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சிறு காடுகளில் அரிதாக காணப்படும் மூலிகையாக இது இருக்கிறது. இலைகளுக்கு ஏற்றார் போல இதன் பூக்களும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இதன் முழு தாவரமும் மருத்துவ குணம் வாய்ந்தது. அதன்படி, மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் போன்றவற்றுக்கு இது மருந்தாக அமைகிறது. மேலும், இதில் இருக்கும் ஒரு வகையான அமிலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இந்த இலைகள் நாக்கில் இருக்கும் உணர்ச்சி மொட்டுகளை உணர்ச்சி இழக்கச் செய்வதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, இதன் இலைகளை மென்று விட்டு, எந்த விதமான இனிப்பை உட்கொண்டாலும் அதன் சுவை தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
Advertisment
Advertisements
அதன்படி, இந்த இலைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். இதற்காக, சிறுகுறிஞ்சாண் மூலிகையின் இலைகளை காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளலாம். இதனுடன் நாவல் விதைகளையும் பொடியாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொடியை தினசரி 21 நாட்களுக்கு 4 கிராம் அளவில் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் சர்க்கரை நோயின் பாதிப்பை பெருமளவு குறைக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்பவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் இது குறித்து விளக்கம் கேட்ட பின்னர் பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.