காய்கறி பழங்கள் எல்லாம் சேர்த்து செய்யக்கூடிய ஏபிசி மால்ட் பவுடர் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். மிகவும் ஆரோக்கியமான இந்த ஏபிசி மால்ட் இந்தியன் ரெசிபி தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது எப்படி என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ஆப்பிள் கேரட் பீட்ரூட் நாட்டுச்சர்க்கரை பாதாம் முந்திரி நட்ஸ் பவுடர் ஏலக்காய் பொடி
செய்முறை
Advertisment
Advertisements
ஏபிசி மால்ட் செய்வதற்கு ஆப்பிள், கேரட், பீட்ரூட் மூன்றையும் 1/4 கிலோ எடுத்துக் கொள்ளவும். மூன்றின் தோள்களையும் சீவி விட்டு சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் ஆகிய மூன்றையும் தேவையான அளவு சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள ஜூஸ்களையும் இந்த முந்திரி பாதாமையும் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கலந்து விடவும். தண்ணீர் எல்லாம் வற்றி ஜாம் பதத்திற்கு வரும்போது அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். நன்கு திக் ஆகி வந்ததும் அதில் நட்ஸ் பவுடர்கள் தேவைப்பட்டால் சேர்த்து நன்கு கெட்டியாகி வரும் வரை கலந்து விடவும்.
பின்னர் இதனை எடுத்து ஆறவைத்தால் பவுடர் மாறி கிடைக்கும். இதனை மிக்ஸியில் ஒரு அரை விட்டு எடுத்தால் தூள் தூளாக நைசாக பவுடர் மாதிரி கிடைக்கும். இதில் வெள்ளை சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். நாட்டுச் சர்க்கரை இல்லாதவர்கள் வெள்ளை சர்க்கரையை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.