காரச் சட்னி, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 3
பூண்டு - 8 பல்
வர மிளகாய் - 4
காஷ்மீரி மிளகாய் - 3
புளி - சிறிதளவு
உப்பு - தேவையானஅளவு
வெல்லம் - 2 சிறிய துண்டு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், புளி, வெல்லம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது இதை அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, மூடி வைத்தபின் பரிமாறினால் சுவையான மதுரை ஸ்டைல் கார சட்னி ரெடி.