நமது வாழ்க்கை முறை உணவு முறையின் மாற்றத்தால் பலருக்கும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது. அதில், பலரும் ரத்தக் குழாயில் கொழுப்பு என்பது அச்சம் தருகிற விஷயமாக இருக்கிறது. அதனால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்க சின்ன வெங்காயத்தை சட்னியாக இப்படி செய்து சாப்பிடுங்கள்.
சின்ன வெங்காயத்தில் மிகச் சிறந்த அளவில் ஃபீனால் கண்டெண்ட் இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதே போல, பாலிசினால் அதிகமாக இருப்பதும் சின்ன வெங்காயம்தான்.
இந்த சின்ன வெங்காயம் உடலுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது. அதனால், இந்த சின்ன வெங்காயத்தை சாப்பிட வேண்டும். சின்ன வெங்காயத்தில் சட்னி அரைத்து சாப்பிடுவது நல்லது என்கிறார் மருத்துவர் சிவராமன்.
மேலும், இந்த சின்ன வெங்காயம் ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் ரத்தக் குழாயில் உள்சுவரில் படியும் கொழுப்பைத் தடுக்கக் கூடிய சைப்ரோனோ லைக்டிக் ஆசிட் என்று சொல்லகூடியதும் இருக்கிறது. அதனால், சின்ன வெங்காயத்தை நிறைய எடுத்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக சின்ன வெங்காயத்தை சட்னி அரைக்கிறார்கள் என்றால், நிறைய எண்ணெய்யைப் போட்டு வதக்கி நிறைய மிளாய் வத்தலைப் போட்டு சுவைக் கூட்டுவதாக நினைத்து சின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்களைக் கெடுத்துவிடாதீகள்.
அப்படி இல்லாமல், சின்ன வெங்காயத்தின் பயன் நமக்கு நிறைய கிடைக்க வேண்டும் என்றால், அதை ரொம்ப வேகவிடக்கூடாது. ரொம்பவும் வதக்கி அதன் நல்ல தன்மையைக் கெடுத்துவிடக் கூடாது. ஓரளவு சின்ன வெங்காயத்தில் பச்சைத் தன்மை இருக்க வேண்டும். அந்த சுவைக்கு நாம் பழக வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
அதாவது, சின்ன வெங்காயம் சட்னி அரைக்கும்போது, அதன் பச்சைத் தன்மை இருக்கும் விதமாக அரைத்து சாப்பிட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“