இப்படி ஒரு சின்ன வெங்காய கார குழம்ப சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க:  சமைச்ச உடனே காலியாகிடும் : அம்புட்டு ருசி

பாரம்பரிய முறையில் செய்யும் சின்ன வெங்காய காரக் குழம்பு. இப்படி ஒரு ரெசிபியை சாப்பிடுருக்கவே மாட்டீங்க.

பாரம்பரிய முறையில் செய்யும் சின்ன வெங்காய காரக் குழம்பு. இப்படி ஒரு ரெசிபியை சாப்பிடுருக்கவே மாட்டீங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குழம்பு

பாரம்பரிய முறையில் செய்யும் சின்ன வெங்காய காரக் குழம்பு. இப்படி ஒரு ரெசிபியை சாப்பிடுருக்கவே மாட்டீங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

எண்ணெய் – தேவையான அளவு

வரமிளகாய்- 10

Advertisment
Advertisements

சீரகம்- 1 டீஸ்பூன்

மிளகு – ½ டீஸ்பூன்

வெந்தயம்- ¼ ஸ்பூன்

கருவேப்பிலை

தேங்காய் துருவது- 1 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 4

பூண்டு- 4

தக்காளி- 2

உப்பு

வதக்க தேவையான பொருட்கள்

டேபிள் ஸ்பூன் நல்லெண்ணை; 2 ½

சின்ன வெங்காயம்

கடுகு

வெந்தயம்

தாளிப்பு வடகம்

பூண்டு

கருவேப்பிலை

பச்சை மிளகாய்

புளி தண்ணீர்- ½ கப்

பொடிச்ச வெல்லம்

செய்முறை:  முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, ½ ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மல்லி,  வரமிளகாய், சீரகம், மிளகு, வெந்தயம் கருவேப்பிலை. தேங்காய், சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனை நன்றாக ஆறவிடவும். தொடர்ந்து அடுத்ததாக, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொழைய வதக்கவும்.  சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம். வதங்கியதும், இதை தனியாக எடுத்துக்கொள்ளவும்.  தொடர்ந்து வறுத்த பொட்களை அரைத்தவுடன், வதங்கிய பொருட்களை சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில், நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம்,  சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயத்தை தனியாக எடுத்துக்கொள்ளவும். அந்த எண்ணெய்யில் கடுகு, வெந்தயம், தாளிக்க வடகம் சேர்த்து வதக்கவும்.  பூண்டு வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் வெளியாகும் வரை வதக்கவும். தொடர்ந்து அதில் புளி தண்ணீர் மற்றும் கூடுதலாக தண்ணீர் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் பொடித்த வெள்ளம் சேர்த்து வேகவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், வதக்கிய சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். 12 நிமிசங்கள் குழம்பு கொதித்ததும், சுவையான சின்ன வெங்காய காரக் குழம்பு ரெடி

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: