முந்திரியில் கரைக்கூடிய நார்சத்து, புரோட்டீன், மெக்னீஷியம், பாஸ்பரஸ், சிங், காப்பர் ஆகியவை இருக்கிறது. நம் ஊற வைத்த பாதாம் அல்லது வால்நட்டை பற்றி கேள்விபட்டிருப்போம், ஆனால் பாலில் ஊற வைத்த முந்திரிகள் மிகவும் நல்லது என்பது நமக்கு வித்தியாசமான விஷயம்தான்.
உறுதியான எலும்புகள்
பாலில் ஊற வைத்த முந்திரிகளை சாப்பிட்டால், உறுதியான எலும்புகள் கிடைக்கும். பாலில் கால்சியம் அளவு அதிகம். இதை தவிற வைட்டமின் கே, மெக்னீசியம், வைட்டமின் பி6 , மான்கனீஸ் ஆகியவை முந்திரியில் இருக்கிறது. இந்த சத்துகள் எலும்பை வலுவாக்குகிறது. மூட்டு வலி ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. மேலும் வயதானவர்கள் இதை சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் எலும்பு வலி நீங்கும்.

மலச்சிக்கல்
பாலில் ஊறவைத்த முந்திரியை சாப்பிடும்போது, மலசிச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது. இப்படி சாப்பிடும்போது, இதில் நார்சத்து அதிகம் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் பாலில் ஊறவைத்த முந்திரிகளை சாப்பிட்டால், வயிறு சுத்தமாகும் .
நோய் எதிர்ப்பு சக்தி
பாலில் ஊற வைத்த முந்திரியில், பாலின் சத்துகளும், முந்திரியின் சத்துகளும் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி உடலை நோய் பாதிக்காது.
எப்படி முந்திரிகளை ஊறவைப்பது ?
இரவில், ஒரு கப் பாலில் 3 முதல் 4 முந்திரிகளை ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த பாலை நாம் சூடு பண்ண வேண்டும். தொடர்ந்து மிதமான சூடில் இருக்கும்போது, முந்திரிகளை சாப்பிட்ட பிறகு, அந்த பாலை குடிக்க வேண்டும். குறிப்பாக இதை அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உடல் எடை கூடும் வாய்ப்பு இருக்கிறது.