அரை ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் நெய்... வெங்கடேஷ் பட் ஸ்டைலில் சாஃப்ட் சப்பாத்தி இப்படி செய்து பாருங்க!
பொதுவாக நாம் சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அவை அப்படி சாஃப்டாக வர சமையல் செயல்முறை சரியாக இருக்க வேண்டும்.
இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக 'சப்பாத்தி' இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன.
Advertisment
பொதுவாக நாம் சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அவை அப்படி சாஃப்டாக வர சமையல் செயல்முறை சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில், செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் சாஃப்ட் சப்பாத்தி எப்படி தயார் செய்வது என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கிலோ தண்ணீர் - 200 மில்லி லிட்டர் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1/2 ஸ்பூன் நெய் - 2 டேபிள் ஸ்பூன் வாழைப்பழம் - 1 (பிசைந்தது)
நீங்கள் செய்ய வேண்டியது
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். அவை கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.
இதனிடையே, ஒரு பாத்திரம் எடுத்து அதில் கோதுமை மாவு மற்றும் அதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை நெய் சேர்க்கவும். பிறகு பிசைந்த வாழைப்பழம் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும். அவற்றுடன் கொதிக்க வைத்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.
மாவு கையில் ஒட்டாதவாறு அவற்றை பிசைந்து கொள்ளவும். இவற்றை ஒரு 10 நிமிடங்களுக்கு துணியைப் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.
இதன்பிறகு, மாவை உருண்டையாக பிடித்து சப்பாத்திக்கு ஏற்றார் போல் தேய்த்துக் கொள்ளவும்.
பின்னர், அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடேற்றி, தேய்த்து வைத்து மாவை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எடுக்கவும். கல்லில் போட்ட மாவு ஒரு பக்கம் 15 வினாடிகள் மறுபக்கம் 15 வினாடிகள் என கல் சூட்டிற்கு ஏற்றார் போல் ஒரு நிமிடத்திற்கு வேக வைத்து எடுத்தால் சாஃப்ட் சப்பாத்தி ரெடி. இவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஸ்களுடன் சேர்த்து வைத்து ருசிக்கலாம்.