Advertisment

2 டீஸ்பூன் வறுத்த ரவை... சாஃப்ட் சப்பாத்திக்கு இப்படி ட்ரை பண்ணுங்க!

சாஃப்ட் சப்பாத்தி செய்ய வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்; மிருவான சப்பாத்திக்கு கேரண்டியான டிப்ஸ்!

author-image
WebDesk
New Update
2 டீஸ்பூன் வறுத்த ரவை... சாஃப்ட் சப்பாத்திக்கு இப்படி ட்ரை பண்ணுங்க!

Soft Chapathi tips and How to make soft Poori in Tamil: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர், தங்கள் காலை மற்றும் மாலை உணவை கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி அல்லது பூரியாக மாற்றிக்கொண்டுள்ளார்கள். சிலர் விருப்பத்துடன் மாற்றியுள்ள நிலையில், சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களின் அறிவுரைப் படி அதிக கோதுமை உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

Advertisment

மேலும், உடல் எடை குறைப்பதிலும், ஆரோக்கியம் காப்பதிலும் கோதுமை மாவு உணவு அவசியமாக மாறியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோதுமை மாவில் பெரும்பாலும், பூரி, சப்பாத்தி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுகிறார்கள். இதில் அதிகமானோர் சாப்பிடுவது சப்பாத்தி தான். ஆனால் இந்த சப்பாத்தியை எப்படி தான் நன்றாக செய்தாலும், சில நேரம் ரப்பர் போன்று வந்து விடும். ஆனால் இந்த எளிய வழிமுறையைக் கடைப்பிடித்தால் சாஃப்ட்டான சப்பாத்தியை நீங்களும் எளிதாக செய்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்: சுகர் பிரச்னையா? ‘சூவிங் கம்’ ட்ரை பண்ணுங்க… வாயில் போட்டு மென்றால் போதுமாம்!

சப்பாத்தி மாவு செய்ய தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 300 கிராம்

வறுத்த ரவை – 2 டீஸ்பூன்

சர்க்கரை – அரை டீஸ்பூன்

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சாஃப்ட் சப்பாத்திக்கு மாவு பிசைவது எப்படி?

சப்பாத்தி மாவு நன்கு பிசைய முதலில் கோதுமை மாவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எடுத்து, அதில் வறுத்த ரவையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.

பின்னர், இதில் சமையல் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். இப்போது மாவு நல்ல மிருதுவான தன்மையுடன் நமக்கு பிசைய வரும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது சாதாரண தண்ணீரை உங்கள் விருப்பத்திற்கேற்ப தேவையான அளவு சேர்த்து, மாவை ரொம்பவும் கெட்டியாக இல்லாமல், ரொம்பவும் தளர்வாக இல்லாமல் கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசைய வேண்டும்.

இப்போது மாவு பிசைந்த உடன் நன்கு மாவை தூக்கி அடித்து பதப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது தான் சப்பாத்தி சாஃப்டாக கிடைக்கும். முன்னதாக பாத்திரத்திற்கு அடியில் ஏதாவது ஒரு துணியை போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை நன்கு ஊற விடுங்கள்.

அதன் பிறகு பூரிக்கு மாவு எடுக்க வேண்டும் என்றால் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அதனை, எண்ணெய் தொட்டு சற்று தடிமனாக சிறிய அளவில் வட்டமாக தேய்க்க வேண்டும், அதுவே நீங்கள் சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும் என்றால் கோதுமை மாவை தூவி நன்கு மெல்லியதாக வட்ட வடிவில் தேய்க்க வேண்டும்.

பிறகு அடுப்பில், ஒரு தோசைக்கல்லை வைத்து சூடேற்றிக் கொள்ளுங்கள். அதில் சப்பாத்தியை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு முனை பகுதிகளில் லேசாக அழுத்தம் கொடுங்கள். பின் மறுபுறம் திருப்பி போட்டு இதே போல அழுத்தம் கொடுங்கள். சப்பாத்தி நடுவில் நன்கு உப்பி வரும்.

சப்பாத்தி சுடும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொண்டு சுட்டால் நன்கு உள்ளேயும், வெளியேயும் வெந்து உப்பலான சப்பாத்தி நமக்கு கிடைக்கும். அதுவே நீங்கள் பூரி போட வேண்டும் என்றால் எண்ணெய் நன்கு கொதித்தபின், அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு பூரி சுட்டு எடுங்கள்.

சப்பாத்தி போட்ட பிறகு சப்பாத்தியின் மீது எண்ணெய் ஊற்றுங்கள். அப்போது தான் மேற்புறமும் நன்கு வெந்து சாஃப்ட் சப்பாத்தி கிடைக்கும். சப்பாத்தியை எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட, நன்கு உப்பி எழுந்து வரும்.

அவ்வளவு சாஃப்ட்டான சப்பாத்தி ரெடி! உங்களுக்குப் பிடித்த சைட் டிஷ் உடன் சூடாக சப்பாத்தியை சாப்பிட்டு மகிழுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Tips Chapati
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment