நம்மில் பலருக்கும் சப்பாத்தி பிடிக்கும். ஆனால் நம் வீடுகளில் செய்யும் போது சாஃப்ட்டாக வருவது இல்லை என்று கவலைப்பட்டிருப்போம். ஆனால் சாஃப்ட் சப்பாத்தி செய்வது மிகவும் எளிது. எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சப்பாத்தி செய்ய கோதுமை மாவு பிசைந்து கொள்ள வேண்டும். 4 உருண்டை சிறிதாகவும், 4 பெரியதாகவும் பிடித்துக் கொள்ளவும். இப்போது சப்பாத்தி கட்டை எடுத்து வைக்கவும். பெரிய உருண்டை மட்டும் எடுத்து அதை கையால் மாவு உருண்டையை பரப்பி அதில் நெய் தடவவும்.
சிறிய உருண்டையில் வேறு ஒரு மாவு எடுத்து அதில் இது போல் செய்து எண்ணெய் அல்லது நெய் தடவவும். இப்போது அதை மடித்து உருண்டை பிடிக்கவும்.
இப்போது சப்பாத்தி கட்டை எடுத்து அதில் மாவு போட்டு ரெடி செய்த சப்பாத்தி உருண்டையை போட்டு திரட்டி எடுக்கவும். இவ்வாறு செய்யும் போது சப்பாத்தி பஞ்சு போல் சாஃப்ட் ஆக வரும். சப்பாத்தி கல்லில் போட்டு எடுக்கும் போது மெதுமெதுப்பாக இருக்கும். இது லேயர் லேயராக வரும். வீட்டில் இந்த டிப்ஸ் ஃபாலோ செய்து பாருங்க.