சப்பாத்தி சாஃப்ட்டாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்களா? இதோ உங்களுக்குதான், ஒரு ஸ்பூன் தயிர், எண்ணெய் விட்டு இப்படி செய்து பாருங்கள் 2 நாள் ஆனாலும் சப்பாத்தி சாஃப்ட் ஆக இருக்கும்.
சாஃப்ட் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
சப்பாத்தி மாவு பிசைவதற்கு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். 3 கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றுங்கள். அடுத்து, 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது மாவை நன்றாகப் பிசையுங்கள். மாவு சப்பாத்தி செய்வதற்கான பதத்தில் பிசைந்து சாஃப்ட்டாக ஒரே ஒருண்டையாக உருட்டி ஒரு அரை மணி நேரத்திற்கு மூடி வையுங்கள்.
அடுத்து மாவை எடுத்து லேசாக மாவு தூவி, கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். அடுத்து, சப்பாத்தி செய்வதற்கான உருண்டைகளாக உருட்டி வைத்துகொளுங்கள், சப்பாத்திக் கட்டையில் சப்பாத்தி தேய்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டவ்வைப் பற்றவைத்து அதில் சப்பாத்தி சுடும் தவாவை காய வையுங்கள், தீயை மிதமாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது சப்பாத்தி தேய்த்து ட்தவாவில் போட்டு விடுங்கள், ஒரு பக்கம் வேகும்போது, மேலே லேசாக எண்ணெய் தடவி விடுங்கள். இரண்டாவது பக்கம் திருப்பி போடுங்கள். லேசாக எண்ணெய் தடவி விடுங்கள். முழுமையாக வேக வையுங்கள். அவ்வளவுதான் சாஃப்ட் சப்பாத்தி தயார். இப்போது உங்களுக்கு பிடித்தமான சென்னாவுடன் சாஃப்ட்டான சப்பாத்தி சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“