ஒரு கப் மாவுக்கு அரை கப் தண்ணீர்... மாவு பிசையாமல் வட்ட வட்டமாக சாஃப்ட் சப்பாத்தி இப்படி பண்ணுங்க!
சப்பாத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையில், வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளது. அதோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. 120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது.
சப்பாத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையில், வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளது. அதோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. 120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது.
சப்பாத்தி எப்படி சாஃப்டாக செய்யலாம் இங்குப் பார்க்கலாம்.
சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு காரணமாக இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிடலாம். ஏனென்றால், இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்கவும் இவை உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி மிகவும் நல்லது.
Advertisment
சப்பாத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையில், வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளது. அதோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. 120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் உள்ளது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல வயது இது மிகவும் முதிர்ந்தவர்களுக்கு ஏற்ற உணவு சப்பாத்தி.
பொதுவாக நாம் சப்பாத்தி செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. இந்த நிலையில், சப்பாத்தி எப்படி சாஃப்டாக செய்யலாம் இங்குப் பார்க்கலாம்.
சாஃப்ட் சப்பாத்தி டிப்ஸ்
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப் தண்ணீர் - 1/2 கப் உப்பு - 1/4 டீஸ்பூன் சர்க்கரை - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே கப்பில் 1/2 கப் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், ஒரு மிக்சி எடுத்து அதில் முதலில் மாவு சேர்க்கவும். அவற்றுடன் எண்ணெய் அல்லது நெய் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து மாவை அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவை மிக்சியில் இருந்து வெளியே எடுத்து அவற்றை பெரிய உருண்டையாக நன்றாக உருட்டிக் கொள்ளவும். இதன் பிறகு அவற்றை சிறிய உருண்டையாக பிடித்து வைக்கவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது கோதுமை மாவு வாங்கிய கவரை எடுத்து அதனை இரண்டாக வெட்டி விடவும். அந்த கவரை நன்றாக துடைத்த பிறகு, அதில் பிடித்து வைத்துள்ள உருண்டையை வைத்து அதன் மீது ஒரு தட்டு வைத்து அமுக்கி தேய்த்து எடுத்தால் வட்ட வட்டமாக சப்பாத்தி வரும்.
உருண்டை பித்த மாவை கவரின் நடுவில் வைத்து மூடி விட்டு, அதன் மீது தட்டு வைத்து அமுக்கி விடவும். வட்டமாக தேய்த்தும் கொள்ளவும். பிறகு தோசைக் கல் அல்லது தாவா சட்டியில் போட்டு எடுத்தால் நீங்கள் எதிர்பார்த்த சாஃப்ட் சப்பாத்தி கிடைத்து விடும்.