கொஞ்சம் நெய், பசும் பால்... 2 நாள் ஆனாலும் சப்பாத்தி சாஃப்ட் மாறாமல் இருக்க சூப்பர் ரெசிபி!
சப்பாத்தி இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை மிகவும் நல்லது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும்.
நம்மில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் உணவுகளில் சப்பாத்திக்கு முக்கிய இடம் உண்டு. இதற்கு இவற்றில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்டு கூறலாம். அந்த வகையில், சப்பாத்தியில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன. மேலும், இவற்றில் வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளது.
Advertisment
நாம் சப்பாத்தி தயார் செய்யும் கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. 120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் நிரம்பியுள்ளது. இந்த அற்புத சப்பாத்தி இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை மிகவும் நல்லது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். தவிர, குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவு.
இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள சப்பாத்தியை எப்படி சாஃப்டாக தாயர் செய்யலாம் என்றும், அவற்றை 2 நாள் வரை அதே சாஃப்ட்டில் இருக்க என்ன டிப்ஸ் என்றும் இங்குப் பார்க்கலாம்.
சாஃப்ட் சப்பாத்தி - தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 ஸ்பூன் காய்ச்சிய பால் - 1/4 கப் நெய் - சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு
சாஃப்ட் சப்பாத்தி - சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் கோதுமை மாவு சேர்க்கவும். அவற்றுடன் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு, இந்த கலவையுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்கும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.
மாவை உருட்டிய பிறகு அவற்றின் மேல் 1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். அவற்றை 1/2 மணி நேரம் அப்படியே தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மாவை உருண்டையாக பிடித்து சப்பாத்திக்கு நன்கு தேய்த்துக் கொள்ளவும். பிறகு அவற்றை கல்லில் போட்டு எடுத்தால் சாஃப்ட் சப்பாத்தி ரெடி.