இன்று பலராலும் விரும்பப்படும் பொதுவான உணவுகளில் ஒன்றாக 'சப்பாத்தி' இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கி இருக்கிறது. மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன.
Advertisment
பொதுவாக நாம் சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அவை அப்படி சாஃப்டாக வர சமையல் செயல்முறை சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில், சாஃப்ட் சப்பாத்தி எப்படி தயார் செய்வது என்று இங்கிலாந்து சோழன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு தயிர் 1 டேபிள் ஸ்பூன் உப்பு எண்ணெய் 3 தேக்கரண்டி வெதுவெதுப்பான நீர்
Advertisment
Advertisements
செய்முறை
மாவு பிசைய ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து உப்பு, தயிர் சேர்த்து கலந்து விடவும். பின்னர் அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து நன்கு உள்ளங்கை வைத்து பிசைய வேண்டும். இறுதியாக மேலே சிறிது எண்ணெய் தேய்த்து ஒரு 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுத்ததாக எப்போதும் போல மாவு உருண்டை பிடித்து சப்பாத்தி திரட்டி போட்டு எடுக்கலாம். சுவையாக இருக்கும். எவ்வளவு நேரம் ஆனாலும் சாஃப்டாக இருக்கும்.