எப்போ சப்பாத்தி செய்தாலும் கல்லு மாதிரி இருக்கு அதுக்கு என்ன செய்றதுன்னு பலமுறை யோசித்து இருப்போம். ஆனா எப்படி செய்தாலும் சப்பாத்தி சாஃப்டா வரலைன்னு கவலை படுறீங்களா ?அப்போ ஒருமுறை செஃப் வெங்கடேஷ் பட் சொல்லுற மாதிரி செய்து பாருங்க புசுபுசுன்னு லேயர் சப்பாத்தி கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
உப்பு
சர்க்கரை
நெய்
சுடுதண்ணீர்
எப்போதும் போல தேவையான அளவு கோதுமை மாவில் சப்பாத்திக்கு தேவையான உப்பு, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சேர்ப்பதால் சப்பாத்தி நல்ல மனமாகவும் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
மாவை கட்டாயம் சுடுதண்ணியில் தான் பிசைய வேண்டும். இல்லையெனில் விரைத்த தன்மைக்கு மாவு சென்றுவிடும் அதனால் சப்பாத்தி சாஃப்டாக கிடைக்காது. அதனால் மாவு பிசைவதற்கு தேவையான அளவு சுடுதண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும்.
சப்பாத்தி இன்னும் சாஃடாக பஞ்சுபோல் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சிறிய வாழைப்பழத்தை மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து மாவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இன்னும் சாப்பிடாக வேண்டுமென்றால் ஒரு சிறிய வாழைப்பழத்தை மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து மாவில் கலந்து கொள்ளலாம். நீ சர்க்கரை உப்பு சுடு தண்ணீர் வாழைப்பழம் கோதுமை மாவு இது ஐந்தும் கலந்து மாவு நன்றாக சாப்பிட்டாக கிடைக்கும்.
பின்னர் தண்ணீர் ஊற்றாமலேயே கோதுமை மாவு, சர்க்கரை,உப்பு, வாழைப்பழத்தை நன்றாக கலந்து கொள்ள வேண்டும் . பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கைகளால் மாவு பிசைந்து கொள்ள வேண்டும்.
கைகளில் மாவு பிசுபிசுவென ஒட்டாமல் வரும்வரை நன்றாக பிசைய வேண்டும். இவ்வாறு ஒரு 5 - 6 நிமிடம் மாவு பிசைய அது பார்ப்பதற்கு நன்கு மென்மையாகவும் சிறிப்பதத்துடன் இருப்பது போல் தோன்றும்.
பின்னர் ஒரு துணியால் 10 நிமிடம் மாவை நன்றாக மூடி வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து மூடி வைத்துள்ள சப்பாத்தி மாவை எடுத்து உள்ளங்கைகளை வைத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதன் மீது சிறிது கோதுமை மாவை தூவி எப்போதும் போல சப்பாத்தி உருட்டலாம்.
மேலும் சப்பாத்தி தேய்க்கும்போது அதில் ஒரு அரை டீஸ்பூன் நெய்யை கலந்து சப்பாத்தியை முக்கோணம் வடிவிற்கு மடித்து தேய்க்க வேண்டும். எவ்வளவு மெல்லிசாக தேய்க்க முடியுமோ அவ்வளவு மெல்லிசாக தேய்த்து கல்லில் போட்டு எடுக்கும் போது லேயர் லேயராக நமக்கு சப்பாத்தி சாப்டாக கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“