எந்த மாவாக இருந்தாலும் சப்பாத்தி சாஃப்டாக செய்ய இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க.
சப்பாத்தி சாஃப்டா வரதுக்கு காரணம் மாவு பிசையருதுல தான் இருக்கு. அதனால் மாவு பிசையும் போது ஒரு சில டிப்ஸ் ஃபாளோ பண்ணாலே போதும் சப்பாத்தி சாஃப்டாக கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு
தயிர்
எண்ணெய்
சுடுதண்ணீர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு போட்டு அதில் சர்க்கரை, உப்பு, எண்ணெய், தயிர் இதை அனைத்தையும் ஒன்றாக கை வைத்து கலந்து விடவும்.
பிறகு சுடுதண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி மாவு பிசைய வேண்டும். மாவு இலகுவாக பிசைந்தால் தான் சாஃப்டாக இருக்கும்.
வீடியோவில் பார்க்க:
எந்த மாவா இருந்தாலும்! சப்பாத்தி Softa இருக்க யாரும் சொல்லாத இரகசியம்..Soft Chapati Recipe in Tamil
பின்னர் இலகுவான மாவின் மீது எண்ணெய் ஊற்றி தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வெள்ளை காட்டன் துணியை எடுத்து அதில் இந்த மாவை வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் அடைத்து ஒரு இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் மாவைத் திரட்டி சப்பாத்தி செய்வதற்கு தேவையான அளவில் உருட்டி எடுக்க வேண்டும். சப்பாத்தியை உருட்டும் போது வட்டமாக தேய்த்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அதை நான்காக மடித்து மீண்டும் தேய்க்க வேண்டும். பின்னர் எப்போதும் போல தோசை கல்லில் வைத்து சப்பாத்தி போட்டு எடுத்தாலே சாஃப்டான சப்பாத்தி கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“