சப்பாத்தி பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு. நல்ல சைவ குருமா, சிக்கன் கிரேவி என இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அதற்கு முதலில் சப்பாத்தி சாப்ட்டாக இருக்க வேண்டும். சாப்பட்டாக இல்லையென்றால் சாப்பிட பிடிக்காது. நாம் என்னதான் பக்குவமாக மாவு பிசைந்தாலும் சில நேரம் சப்பாத்தி மிருதுவாக வராது.
Advertisment
ஆனால் சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் நாமும் ஈஸியாக சாஃப்ட் சப்பாத்தி செய்யலாம். மாவு ஊறவைக்காமல் தேய்த்த உடனேயே சுட்டதும் புசுபுசுன்னு வரக்கூடிய அளவிற்கு சப்பாத்திக்கு எப்படி மாவு பிசைவது என்று விஸ்மையா குடில் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு உப்பு தண்ணீர்
Advertisment
Advertisements
செய்முறை
ஒரு வடசட்டியில் கோதுமை மாவு உப்பு போட்டு கலந்து விடவும். பின்னர் தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து எடுத்து கொள்ளவும். இதனை சப்பாத்தி கட்டையில் போட்டு மேலே உருளையை வைத்து தட்டினால் போதும் சுவையான சப்பாத்தி மாவு ரெடியாகிவிடும்.
சப்பாத்தியை கட்டை வைத்து அடிக்கும் போது மாவு பதமாகி சப்பாத்தி நன்றாக வரும். இதனை வைத்து உடனடியாக சப்பாத்தி செய்யலாம்.