2 நாள் ஆனாலும் சப்பாத்தி சாஃப்ட்டாக இருக்கும்… மாவு பிசையும் போது இது முக்கியம்!

சப்பாத்தி இரண்டு நாட்கள் ஆனாலும் சாஃப்டாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

சப்பாத்தி இரண்டு நாட்கள் ஆனாலும் சாஃப்டாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
சப்பாத்தி

சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும். 

Advertisment

அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.

அப்படியாக பூரி மாதிரி புசுபுசுன்னு சாஃப்டாகவும் லேயராகவும் சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம். சாஃப்ட் சப்பாத்தி செய்வது பற்றி அபூர்வாஸ் நல பாகம் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதை பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

கோதுமை மாவு 
உப்பு
எண்ணெய்

செய்முறை

ஒரு கப்பில் தேவையான அளவு கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும் நன்கு பிசைந்ததும் அதன் மேல் சிறிது எண்ணெய் விட்டு ஊற விடவும். 

மாவை எடுத்து சிறிது சிறிதாக திரட்டி கொள்ளவும் இவற்றை எப்போதும் போல திரட்டி மீண்டும் அதை நான்காக மடித்துப் போட்டு திரட்டி தோசை சுட்டு சப்பாத்தி சுட்டு எடுத்தால் சுவையாக இருக்கும். அவ்வளவு தான் சாஃப்ட் சப்பாத்தி தயார்.

அதேபோல சாஃப்ட் சப்பாத்திக்கு இன்னும் சில டிப்ஸ்களையும் பார்க்கலாம். மாவு பிசையும்போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவது மாவை மிருதுவாக்கும். மாவை ஈரமான துணியால் மூடி குறைந்தது 30 நிமிடங்களாவது ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் வரை ஊற வைத்தால் இன்னும் நல்லது. இது மாவு மிருதுவாக உதவும். மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் சேர்ப்பது சப்பாத்தியை மென்மையாக்கும்.

Chappathi Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: