சப்பாத்தி செய்வது சவாலாகத் தோன்றலாம், ஆனால் சரியான நுட்பங்களைப் பின்பற்றினால், வீட்டிலேயே மிருதுவான மற்றும் சுவையான சப்பாத்திகளை எளிதாகத் தயாரிக்கலாம். இந்த எளிய செய்முறையைப் பின்பற்றி, ஃபேர் அண்ட் ஃப்ளேவர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு உப்பு எண்ணெய் அல்லது நெய்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், படிப்படியாக தண்ணீர் சேர்த்து, மாவை மென்மையாகப் பிசையத் தொடங்கவும். மாவு சற்று கெட்டியானதும், 2 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, சுமார் 5-7 நிமிடங்கள் வரை மாவு மிகவும் மென்மையாகவும், இழுபடும் தன்மையுடனும் வரும் வரை நன்கு பிசையவும். பிசைந்த மாவை சம அளவுள்ள சிறிய உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ளவும்.
சப்பாத்தி தேய்க்கும் பலகையில் சிறிது மாவு தூவி, ஒவ்வொரு உருண்டையையும் மெல்லியதாகவும், வட்ட வடிவமாகவும் தேய்க்கவும். ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும். சூடானதும், தேய்த்த சப்பாத்தியை தோசைக்கல்லில் போடவும். சப்பாத்தியின் மேற்பரப்பில் சிறு சிறு குமிழ்கள் தோன்ற ஆரம்பித்தவுடன், அதைத் திருப்பிப் போடவும்.
இப்போது, சப்பாத்தியின் இருபுறமும் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி, பொன்னிறமாக மாறும் வரை சுடவும். சப்பாத்தி உப்பி வரும். சுட்ட சப்பாத்தியை தோசைக்கல்லில் இருந்து எடுத்து ஒரு தட்டிற்கு மாற்றவும். சுடச்சுட சப்பாத்தியின் மேல் ஒரு சிட்டிகை நெய் அல்லது எண்ணெய் தடவலாம்.
சூடாக இருக்கும்போதே சப்பாத்தியை மடித்து, உங்களுக்குப் பிடித்தமான குருமாவோ, சட்னியோ வைத்து சாப்பிடலாம்.