சப்பாத்தி 2 நாள் ஆனாலும் அப்படியே இருக்கும்... 2 ஸ்பூன் இந்த சேருங்க போதும்; செம்ம சாஃப்ட்!

சாஃப்டாக சப்பாத்தி செய்ய வேண்டுமா? அப்போ அதற்கு மாவு பிசையும்போது சேர்க்க வேண்டிய ரகசியம் பற்றி பார்ப்போம்.

சாஃப்டாக சப்பாத்தி செய்ய வேண்டுமா? அப்போ அதற்கு மாவு பிசையும்போது சேர்க்க வேண்டிய ரகசியம் பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Chappathi

ஹோட்டல்களில் கிடைப்பதைப் போன்ற அருமையான, புசுபுசுப்பான, மிருதுவான சப்பாத்தி வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம். வழக்கமாக நாம் செய்யும் சப்பாத்திக்கும், ஹோட்டல் சப்பாத்திக்கும் இருக்கும் வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஹோட்டல் சப்பாத்தியில் என்னென்ன பொருட்கள் சேர்க்கிறார்கள் என்பதைப் பற்றி டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருபது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – அரை கிலோ (பாக்கெட் மாவு அல்லது வீட்டில் அரைத்த மாவு)
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
கொண்டைக்கடலை மாவு (கருப்பு கடலை மாவு) – 50 கிராம்
உப்பு – ¾ டீஸ்பூன் (தேவைக்கேற்ப)
சர்க்கரை (ஜீனி) – 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் (மாவு பிசையத் தேவையான அளவு)
சன்ஃப்ளவர் ஆயில் அல்லது உங்களுக்குப் பிடித்த எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மேலாகத் தடவ எண்ணெய் – ½ டீஸ்பூன்

செய்முறை:

Advertisment
Advertisements

அரை கிலோ கோதுமை மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் மைதா சேர்க்கவும். மைதா சேர்ப்பது சப்பாத்தி மிருதுவாக இருக்கவும், குழைவாகவும் இருக்க உதவும். இதனுடன் 50 கிராம் கொண்டைக்கடலை மாவு சேர்க்கவும். இது சப்பாத்திக்கு கூடுதல் மென்மையையும் சுவையையும் கொடுக்கும். (கொண்டைக்கடலை மாவு கடைகளில் கிடைப்பது அரிது, சுத்தமான கருப்புக் கடலையை வாங்கி காயவைத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்).

மாவுடன் ¾ டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு கெட்டியாக பிசையவும். தண்ணீர் மிகவும் சூடாக இருக்கக்கூடாது, பிசையக்கூடிய வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். மாவு பிசைவதுதான் சப்பாத்தியின் மென்மைக்கு மிகவும் முக்கியம். நன்கு அழுத்தி, பிசைந்து உருட்டவும்.

பிசைந்த மாவின் மேல் ½ டீஸ்பூன் எண்ணெய் தடவி, ஒரு மூடி போட்டு சுமார் அரை மணி நேரம் முதல் 40 நிமிடங்கள் வரை ஊற விடவும். ஊறிய பிறகு, மாவு ஷைனிங்காகவும் வழுவழுப்பாகவும் மாறும். மீண்டும் ஒருமுறை மாவை நன்கு அடித்துப் பிசைந்து மென்மையாக்கவும்.

பிசைந்த மாவை உங்களுக்குத் தேவையான அளவில் சப்பாத்தி உருண்டைகளாக உருட்டி எடுத்து வைக்கவும். (வீடியோவில் சற்று பெரிய உருண்டைகளாகப் போடப்பட்டுள்ளது, உங்கள் விருப்பத்திற்கேற்ப சிறியதாகவோ பெரியதாகவோ செய்யலாம்.)

சப்பாத்தி தேய்க்கும் பலகையில் லேசாக கோதுமை அல்லது மைதா மாவைத் தூவி, உருட்டிய மாவை வைத்து மெல்லியதாக தேய்க்கவும். சப்பாத்தி மெல்லியதாக இருந்தால் நன்கு மிருதுவாக வரும். சப்பாத்தி சுடுவதற்கு கல்லு நன்கு சூடாக இருக்க வேண்டும். சூடு குறைவாக இருந்தால் சப்பாத்தி சரியாக வேகாது.

சூடான கல்லில் தேய்த்த சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் சேர்க்காமல் சுடத் தொடங்கவும். லேசாக பொரிப்புகள் வந்தவுடன், மாறி மாறி திருப்பிப் போட்டு இருபுறமும் நன்கு வேக விடவும். ஒரே பக்கத்தில் நீண்ட நேரம் விடாமல், அடிக்கடி திருப்பிப் போடுவது சப்பாத்தி கருகாமல், சீராக வேக உதவும்.

சப்பாத்தி நன்கு வெந்து, புசுபுசுவென்று வந்தவுடன் எடுத்துவிடலாம். இந்த மிருதுவான சப்பாத்தியை குருமாவோ அல்லது உங்களுக்குப் பிடித்த சைடிஷுடனோ சேர்த்துச் சாப்பிடலாம்.  

Chappathi Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: