சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அதனால் நீங்கள் ட்ரை பண்ணாமல் இருக்கும் உணவுகளில் ஒன்றான இடியாப்பத்தை எப்படி சுவையாக சாஃப்டாக செய்ய மாவு பிசைவது என்று நளினிமணி குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
தண்ணீர் உப்பு தேங்காய் எண்ணெய் சோள மாவு சர்க்கரை காய்ச்சிய பால் அரிசி மாவு
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். வேறொரு கிண்ணத்தில், சோள மாவு, சர்க்கரை மற்றும் காய்ச்சிய பால் சேர்த்து கலந்து அதில் சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும், அதை இறக்கி வெதுவெதுப்பாக பிசையவும். இப்படி மாவு பிசைந்தால் இடியாப்பம் பல மணி நேரம் மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் இருக்கும்.