வீட்டில் இட்லி, தோசைக்கு மாவு அரைக்க எப்படி மாவு அரைப்பது என்று யாருக்கும் தெரியாது. எந்த அளவுகளில் மாவு சேர்ப்பது எப்படி அரைப்பது அதற்கான பதம் என்ன என்று தெரியாது. ஆனால் அதற்கு எப்படி எல்லாம் மாவு அளவு சேர்ப்பது அடஹ்ர்கான பதம் என்ன என்று செந்ப் வெங்கடேஷ் பட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு
இட்லி ரவை
உப்பு
செய்முறை
இந்த மூன்று பொருட்களை வைத்தே சுவையான இட்லி மாவு அரைத்து இட்லியும் செய்ய முடியும். தோசைக்கும் இட்லிக்கும் ஒரே மாவு வைத்து சுடுவார்கள் அதே போல ஒரே மாவை வைத்து தோசை இட்லி பணியாரம் எல்லாவற்றையும் செய்வது வழக்கம் தான்.
ஆனால் இப்போ நீங்கள் கொஞ்சம் புதுவிதமாக ட்ரை பண்ணுங்க. இதற்கு உளுந்து,இட்லி ரவை போதுமானது.
உளுந்தை நன்கு கழுவி ஒரு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்ன இதை தண்ணீர் இல்லாமல் கிரைண்டரில் சேர்த்து அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
எந்த கப்பில் போட்டாலும் ஒரு கப் உளுந்து ரெண்டு கப் இட்லி ரவை எடுக்க வேண்டும்.
பின்னர் உளுந்து அரையும் போது ரவையை நன்கு கழுவி வைக்கவும். கழுவும்போதே அது ஊறிவிடும். பின்னர் உளுந்து நன்கு அரைந்து வந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
பின்னர் கிரைண்டரில் ரவையை சேர்த்து மைய அரைத்து எடுக்கவும். இதற்கும் அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைக்கலாம்.
Venkatesh Bhat makes Idly maavu & ghee idly | idli recipe in tamil | ghee idly | IDLY | Idly batter
இவை இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்ததும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு மாவையும் சேர்த்து உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து விடவும்.
இதனை அப்படியே ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். நன்றாக புளித்து வந்ததும் மாவை கலைக்காமல் எடுத்து இட்லி ஊற்றலாம். இட்லி புசுபுசுன்னு சாஃப்டாக வரும்.