/indian-express-tamil/media/media_files/2024/12/19/cEL2tDumlrXrrE6tN4ea.jpg)
இட்லியின் பிறப்பிடம் கர்நாடகா தான். அங்கிருந்துதான் இட்லி இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இட்லியை நீங்கள் உண்டபோது, கரம் மசாலா, கொத்தமல்லி சட்னி, காரம் சட்னி எனப் பல சட்னிகளைத் தொட்டு உண்டிருப்பீர்கள். ஹொரிகடலே சட்னியோடு இதைச் சேர்த்துச் சாப்பிடும்போது சுவை கூடும். மென்மையான, துள்ளியமான இட்லிக்கு மாவு தயாரிக்கும்போது சில முக்கிய குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். இதனை எப்படி செய்ய வேண்டும் என்று லஷ்மிகுக்கிங் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 3 கப்
உளுந்து - 1 1/4 கப்
உப்பு - 1 1/4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர்
செய்முறை:
இட்லி அரிசியை நன்கு கழுவி, 8 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை நன்கு கழுவி, தேவையான அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். உளுந்தை ஊற வைக்கும்போது, அதைக் குளிர்சாதனப் பெட்டியில் (refrigerator) வைக்கவும். உளுந்தை அரைக்கத் தேவைப்படும் தண்ணீரையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
உளுந்தை ஊற வைக்கும்போது குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால், மாவு மிருதுவாக இருக்கும். மேலும், அரைக்கும்போது மாவு சூடாகாமல் இருக்கும். மாவு அரைக்கும்போது, கிரைண்டர் சூடானால், உளுந்து மாவு பொங்கி வராது. ஆகவே, குளிர்ந்த உளுந்தும், குளிர்ந்த தண்ணீரும் உளுந்து மாவை அரைக்கும்போது பொங்கி வரும்படி செய்யும்.
உளுந்து மாவு பொங்கி வருவதுதான் மென்மையான இட்லிக்கு முக்கிய காரணம். உளுந்து அரைக்க சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். மாவு மிருதுவாகவும், தண்ணீரில் மிதக்கும்படியும் இருக்க வேண்டும். உளுந்து மாவை எடுத்துவிட்டு, கிரைண்டரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும். உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். காலநிலை மாற்றம் காரணமாக இன்னும் அதிக நேரம் தேவைப்பட்டால், 10 மணி நேரம் வரை புளிக்க விடலாம். மாவு நன்கு புளிக்க வேண்டும். இட்லித் தட்டுகளில் எண்ணெய் தடவி, அதில் 4-5 கரண்டி மாவை ஊற்றவும். மெதுவாகத் தட்டிவிடவும். இட்லியை 5 முதல் 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். இட்லியை 4 துண்டுகளாக வெட்டி, ஹொரிகடலே சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.