இட்லி, தோசை எப்போதும் புசுபுசுன்னு சாஃப்டாக வருவதற்கு மாவு அரைக்க ஊற வைக்கும் பொருட்களின் சரியான அளவு குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 4 டம்ளர்
பச்சரிசி - 2 டம்ளர்
உளுத்தம் பருப்பு - முக்கால் டம்ளர்
வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்
இவை அனைத்தையும் நன்கு கழுவி இட்லி அரிசி, பச்சரிசி ஒரு பாத்திரத்திலும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் தனித்தனி பாத்திரத்திலும் ஊற வைக்க வைக்க வேண்டும்.
அரிசி ஊற வைத்த பாத்திரத்திலேயே பொட்டுக்கடலையும் 2 டீஸ்பூன் சேர்த்து ஊற வைக்கவும். இவை அனைத்தும் சுமார் 5 மணி நேரம் ஊற வேண்டும். உளுத்தம் பருப்பு மட்டும் ஃபிரிட்ஜ்யில் வைக்கவும்.
முதலில் கிரைண்டரில் வெந்தயம் சேர்த்து நன்கு அரைக்கவும். வெந்தயம் நன்கு மைய அரைந்த உடன் உளுத்தம்பருப்பு போட்டு அரைக்கவும். பின்னர் அதனுடன் அரிசியை போட்டு அரைக்கவும்.
மாவு எல்லாம் நன்கு அரைத்த உடன் அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்து விடவும். பின்னர் ஒரு 8 மணி நேரம் நன்கு புளிக்க விட வேண்டும். பின்னர் எப்போதும் போல எடுத்து தோசை, இட்லி சுட ஆரம்பிக்கலாம்.
மாவு சரியான பதத்தில் அரைந்ததா என அறிய ஒரு டம்ளர் தண்ணியில் சிறிது விட்டு பார்த்தால் புசுன்னு தண்ணியில் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“