பரோட்டா கடையில் வாங்கி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இனி கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டிய அவசியம் தேவை இல்லை. வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். வெறும் இடியாப்பம் ஒலக்கு போதும் சாஃப்ட் பரோட்டா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு
உப்பு
எண்ணெய்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, தேவையான உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
பின்னர் இடியாப்பம் அச்சு எடுத்து இந்த மாவை அதில் முக்கால் பங்கிற்கு நிரப்பவும். தட்டில் சிறிது எண்ணெய் தேய்த்து பிழிந்து விடவும். பின்னர் தட்டில் இருப்பதை எடுத்து திரட்டி விடவும்.
இடியாப்ப அச்சி போதும் ! யார் வேணாலும் ஈஸியாக பரோட்டா செய்யலாம் | Easy Parrota Recipe Tamil | parotta
மாவை ஒரு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் இதை எப்போதும் போல எண்ணெயில் சுட்டு எடுக்கலாம்.
வெறும் மூன்று பொருளை வைத்து சாஃப்ட் பரோட்டா இனி ஈஸியாக இந்த முறையை பயன்படுத்தி வீட்டிலேயே செய்துவ் இடலாம்.