காலை டிபன் என்றாலே நம் நினைவிற்கு வருவது இட்லி, தோசைக்கு அடுத்து வருவது பூரி. அப்படி எல்லோருக்கும் பிடித்த எண்ணெய் குடிக்காத புசுபுசு பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கோதுமை மாவு
மைதா மாவு
உப்பு
எண்ணெய்
சர்க்கரை
செய்முறை:
முதலில் ஒரு பவுலில் கோதுமை மாவு,மைதா மாவு, தேவையான அளவு உப்பு, சிறிது சர்கக்ரை போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். மாவு நன்றாக இலக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த மாவினை 15 நிமிடம் வரை ஊற வைக்கவும் . பிறகு மாவினை பூரி வடிவத்தில் திரட்டி வைத்து கொள்ளவும். மீதமுள்ள அனைத்து மாவினையும் உருட்டி தயார் செய்து கொள்ளவும்.
இதுல போட்டு பூரி சுட்டு பாருங்க! ஆச்சரியப்படுவீங்க
பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதை கடாய் முழுவதும் ஒரு முறை பரப்பி விட்டு அதில் மேலும் சிறிது உப்பு போட்டு அதில் உருட்டி வைத்துள்ள பூரி மாவினை போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான பூரி தயார்.
பூரிக்கு மட்டுமின்றி எல்லா வகையான் எண்ணெய் பலகாரத்திற்கும் எண்ணெயில் சிறிது உப்பு போடலாம். கருகாமல் எண்ணெய் குடிக்காமல் பலகாரம் வரும்.