மதிய உணவு சமைத்த சாதம் மீந்துவிட்டதா? இரவு உணவுக்கு என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்கள். வெறும் பத்து நிமிடங்களில் சுவையான இரவு உணவை தயார் செய்ய ஒரு எளிய வழி உள்ளது. இதை எப்படி செய்வது என்று சக்கரசாதமும் வடகறியும் இன்ஸ்டா பக்கத்தில் சோம்பேறி டின்னர் சீரிஸ் ஒன்றை கூறியுள்ளனர். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மீந்த சாதம்
வரமிளகாய் - 2
புளி
உப்பு
மிளகாய்த்தூள்
தண்ணீர்
சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை
தேங்காய்
தேங்காய் எண்ணெய்
அப்பளம் அல்லது ஆம்லெட்
செய்முறை:
முதலில் இரண்டு வரமிளகாயை சுட்டு எடுத்துக் கொள்ளவும். சுட்ட வரமிளகாயுடன் புளி, உப்பு, சிறிதளவு மிளகாய்த்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியிலும் அரைக்கலாம்.
சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தேங்காய் சேர்த்து ஒன்றும் பாதியுமாக இடித்துக் கொள்ளவும்.
இடித்த கலவையுடன் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை மீந்த மதிய சாதத்துடன் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால், அப்பளம் அல்லது ஆம்லெட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.