நாம் அசைவம் என்றாலே சிக்கன், மட்டன் என்பதொடு நிறுத்திவிடுவோம். ஆனால் கடல் சாந்த உணவுகளை நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. குறிப்பாக இறால், அவ்வளவாக நான் சமைப்பதுயில்லை. இந்நிலையில் மணமணக்கும் இறால் குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இறால்- 600 கிராம்
உப்பு – தேவைகேற்ப
மஞ்சள் தூள் – ½ டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2.5 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி வத்தல் - 6
கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பில்லை – இரண்டு கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி- 30 கிராம்
புலி – 25 கிராம்
நறுக்கிய வெங்காயம்- 200 கிராம்
வெல்லம்- 20 கிராம்
இறால் அவித்த தண்ணீர் – 300 எம்எல்
தேங்காய்ப்பால் – 200 எம்எல்
நறுக்கிய தக்காளி – 200 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இறாலை நன்கு சுத்தப்படுத்தி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சீரகம், காஷ்மீரி மிளகாய், கொத்தமல்லி விதைகள், வெந்தயம், கருவேப்பில்லை ஆகியவற்றை வறுகக்வும். சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். இதில் பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதன் பின்பு, ஊற வைத்த புலியை அதில் ஊற்றகவும். மசாலா நன்கு கொத்ததும். அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைக்கும்போது, புலித் தண்ணீரை சேர்த்து அரைக்க வேண்டும்.
இப்போது வேறு ஒரு பாத்திரத்தை எடுக்கவும், அதில் எண்ணெய் ஊற்றவும். இதில் இறால்களை போடவும், வெளியில் பொன்னிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் இறாலின் நடுப்பகுதி பச்சையாக இருக்க வேண்டும். தற்போது இந்த இறால்களை தனியாக எடுத்துவைக்க வேண்டும். தற்போது அந்த பாத்திரத்தில் மேலும் எண்ணெய் ஊற்றி, காஷ்மீரி மிளகாய், சீரகம், வெந்தயம், கடுகு, கருவேப்பில்லை போட்டு வறுக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம் வதக்கியதும். அரைத்து வைத்திருந்த மசாலாவை இதில் சேத்து வதக்கவும். மீதி உள்ள புலி தண்ணீர் சேர்த்துகொதிக்கவிடவும். இதில் வெல்லம் மற்றும் இறால் கொதிக்க வைத்த தண்ணீரை சேக்கவும். தற்போது இதை நன்றாக கலந்துவிடவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, மற்றும் தேங்காய் பால் சேக்கவும். இதில் உப்பு சேத்த பிறகு 10 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடிவிடவும். இதைத்தொடர்ந்து கருவேப்பில்லை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்துகொள்ளவும். தற்போது மீதமான தீயில் அடுப்பை மாறிய பிறகு வறுத்த இறாலை சேகக்வும். இறால் நன்கு வேகும் வரை குழம்பை கொதிக்கவிடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை சேகக்வும். சுவையான இறால் குழம்பு ரெடி