scorecardresearch

இந்த உணவை இப்படி செய்து சாப்பிடுங்க; வைட்டமின் E சத்து கிடைக்கும்

சோயா பீன்ஸ் ஊற வைத்து முளைக்கட்டி தோசை சுட்டி சாப்பிடலாம். முளைக்கட்டிய சோயா பீன்ஸில் வைட்டமின் E நன்மைகள் கிடைக்கும்.

Soya beans
Soya beans

சோயா பீன்ஸில் இப்படி ஒரு உணவு செய்யலாம் என்பதை பலரும் கேள்விபட்டிருக்க மாட்டோம். முளைக்கட்டிய சோயா பீன்ஸில் வைட்டமின் E நன்மைகள் கிடைக்கும். சோயா பீன்ஸில் அதிகளவு புரதம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. முளைக்கட்டிய சோயா பீன்ஸில்
தோசை செய்வது குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சோயா பீன்ஸ் – 2 கப்
கேரட் – 1
முள்ளங்கி – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
அரிசி மாவு – 4 ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை

முதலில் கேரட், முள்ளங்கியை துருவிக் கொள்ளவும். சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மிக்சி ஜாரில் ஊறிய சோயா பீன்ஸை போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் எப்போதும் போல் தோசை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான சோயா பீன்ஸ் தோசை ரெடி. தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Soya beans dosa rich in proteins

Best of Express