வெங்கடேஷ் பட்டின் சோயா சுக்கா ரெசியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்க. இதில் அதிக புரத சத்து உள்ளது.
தேவையான பொருட்கள்
தனியா- 2 டீஸ்பூன்
1 – டீஸ்பூன் மிளகு
1 -டீஸ்பூன் சீரகம்
1 ½ டீஸ்பூன் - சோம்பு
20 கிராம் கொப்பரத் தேங்காய்
200 கிராம் சோயா
3 ஸ்பூன் கடலை எண்ணெய்
3 ஸ்பூன் பொட்டுக்கடலை
7 வத்தல்
1 கப் சின்ன வெங்காயம்
6 பச்சை மிளகாய்
1 கொத்து கருவேப்பிலை
1 பெரிய வெங்காயம்
உப்பு
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 தக்காளி நறுக்கியதை
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மல்லித் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
200 எம். எல் தண்ணீர்
முக்கால் ஸ்பூன் கரம் மசாலா தூள்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கொப்பரத் தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து நன்றாக அரைத்துகொள்ளவும். மீண்டும் இத்துடன் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்துகொள்ளவும். சோயாவை 15 நிமிங்கள் சுடான நீரில் போடவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வத்தல், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து கிளரவும், உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்களியை சேர்த்து கிளரவும். நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கிளரவும். நன்றாக வதங்கியதும், தொடர்ந்து கரம் மசாலாவை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தற்போது சோயாவை சேர்த்து கிளரவும். இதற்கு மேலாக அரைத்த பொடியை 2 ஸ்பூன் தூவ வேண்டும். தொடர்ந்து கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“