அசைவம் விரும்புபவர்களுக்கு சிக்கன், மட்டன், மீன் எனப் பல வெரைட்டி உணவுகள் உள்ளன. ஆனால் சைவம் சாப்பிடுபவர்களுக்கு காளான், உருளைக்கிழங்கு என குறிப்பிட்ட சில உணவுகள் மட்டுமே இருப்பதாக பலர் கூறி கேள்விபட்டது உண்டு. இதைப் பற்றின விவாதங்கள் பலவும் நாம் கேட்டிருப்போம். அந்தவகையில் சிக்கன் குழம்பு சுவையில் மீல் மேக்கர்
கிரேவி சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 100 கிராம்
தயிர் - 3 டீஸ்பூன்
வெங்காயம் -1
தக்காளி - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் மீல் மேக்கரை தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மீல் மேக்கருடன் தயிர் சேர்த்து கலந்து மீண்டும் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பச்சை வாசனைப் போகும் வரை வதக்க வேண்டும். பிறகு எடுத்து ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதேகடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவையை ஊற்றி, தக்காளி அரைத்து வைத்ததையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிது கொதி வந்ததும் தண்ணீர் சேர்த்து மீல் மேக்கர், உப்பு போடவும். பிறதகு, கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி சிறிது நேரம் விட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான், சுவையான மீல் மேக்கர் கிரேவி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“