வெஜ் பிரியர்களா நீங்கள் அப்போ இந்த டிஷ் உங்களுக்காக தான். அனைவருக்கும் பிடித்த மாதிரி வெஜ்ஜில் ஒரு கறி பிரியாணி செய்யலாம். நான்வெஜ்க்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சுவை நன்றாக இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படி நான்வெஜ் ஸ்டைலில் வெஜ் பிரியாணி செய்வது பற்றி ஹோம்குக்கிங் தமிழ் யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
சோயா - 1 கப்
தயிர் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மிலி)
நெய் - 2 மேசைக்கரண்டி
தக்காளி - 2
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
தக்காளி - 2
முழு மசாலா
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை & ஏலக்காய் & சீரகம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
நசுக்கிய இஞ்சி & பூண்டு - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
புதினா இலைகள்
கொத்துமல்லி தழை
உப்பு
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் சோயாவை வெந்நீர் சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். அடுத்து சோயாவை மசாலாவில் ஊறவைக்க ஏற்கனவே ஊறவைத்த சோயா, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிய பின்பு இருபது நிமிடத்திற்கு ஊறவைக்கவும்.
ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் சேர்த்து இருபது நிமிடத்திற்கு ஊறவைக்கவும். அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் & சீரகம் சேர்த்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
சோயா புலாவ் | Soya Pulav Recipe in Tamil
வெங்காயம் பொன்னிறமானவுடன் நசுக்கிய இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மசாலாவில் ஊறவைத்த சோயா சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில் புதினா இலை, கொத்தமல்லி இலை, ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்னர் விசில் அடங்கியதும் திறந்து பரிமாறலாம். இதற்கு தயிர்பச்சடி, குருமா அனைத்தும் நன்றாக இருக்கும்.