Advertisment

மீல்மேக்கர் வைத்து மொறு மொறு காலை உணவு; ஹெல்தி ரெசிபி ட்ரை பண்ணுங்க

சுவையான, ஹெல்தியான மீல்மேக்கர் தோசை செய்வது பற்றி இங்கு பார்ப்போம். 

author-image
WebDesk
New Update
dosa so

சோயா தோசை

கோதுமை மாவு – 1/2 கப்
பூண்டு – 1 பல் (பொடியாக நறுக்கியது)
 சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு 

Advertisment

அரைப்பதற்கு

மீல் மேக்கர் – 1 கப்
இஞ்சி – சிறிய துண்டு
ரவை – கால் கப்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் மீல் மேக்கரை சுடு நீரில் போட்டு, 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள நீரை வடித்து எடுக்கவும். பின்னர் மிக்ஸி ஜாரில் மீல் மேக்கர், 1 துண்டு இஞ்சி, ரவை 1/4 கப், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதில் கோதுமை மாவு, பூண்டு, சீரகம், கொத்தமல்லியை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ரவா தோசை போன்று ஊற்றி, எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான மீல்மேக்கர் தோசை தயார்.

Cooking Tips Health benefits of soya chunks
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment