உணவு என்றாலே மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை சாப்பிட விரும்புவோம். சைவம், அசைவம் என சாப்பிட விரும்புவோம். சைவ உணவுகளில் காளாண், முட்டை கோஸ் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வரிசையில் மீல் மேக்கரும் உண்டு. சிக்கன் சுவையில் சைவ உணவு சாப்பிட மீல் மேக்கர் பொருத்தமானது. அந்த வகையில் மீல் மேக்கர் ப்ரை செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 2 கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டு
கரம் மசாலா - 1 தேக்கரண்டு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி -சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
செய்முறை
முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின் நீரை வடிகட்டி, மீல் மேக்கரில் உள்ள நீரையும் பிழிந்து எடுக்கவும். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெங்காயம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும். தாளிப்பதற்கு தேவையான பொருட்கள் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது, மசால் தூள் சேர்த்து கிளறி உப்பு போடவும். அடுத்து மீல் மேக்கரை சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் சுவையான மீல் மேக்கர் ப்ரை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil