அழகான மாலைப்பொழுதில் டீ எப்படி கண்டிப்பாக தேவையோ அதுபோல ஒரு நொறுக்குத்தீனி நிச்சயம் தேவைதான். முருக்கு, பச்சி, வடை சாப்பிட்டு அலுத்திபோயிருந்தால், ஒரு கட்லேட் சாப்பிடலாம் என்ற எண்ணெம் வரும். இந்நிலையில் சோயா கட்லேட் எப்படி ஈசியாக செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சோயா, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் நறுக்கியது, மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், எண்ணெய்.
செய்முறை
சிறிய சோயா அல்லது பெரிய சோயா எதை எடுத்துகொண்டாலும் சரி. அதை கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஊறிய பிறகு, தண்ணீரை முழுவதுமாக வடித்துக்கொள்ளவும். தற்போது மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும். தற்போது சோயாவை அத்துடன் சேர்த்து அரைக்கவும்.

இதை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். தற்போது அரைத்துவைத்திருந்த கலவையில், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சீரகத்தூள், மைதா மாவு, கார்ன் பிளவர் மாவு ஆகியவற்றை சேர்ந்து பிசைந்துகொள்ளுங்கள். தற்போது கட்லேட் வடிவத்தில் உருண்டைகளை உருட்டவும். ஒரு சப்பாத்தி கல்லில் எண்ணெய் அதிகமாக ஊற்றி இந்த கட்லேட்டை வைத்து பொன்னிறமாக பொறிக்க வேண்டும். தற்போது சுவையான சோயா கட்லேட் ரெடி