பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா சொல்லும் சோயா கோலா உருண்டையை முயற்சிக்க பலரும் நினைத்திருப்பார்கள். சிலர் குறிப்பு தெரியாமல் விட்டிருக்கலாம். ஆனால், சோயா கோலா உருண்டை தயார் செய்வது ஈஸியாகும்.
விஜய் டி.வி-யில் முன்னணி சீரியலாக வலம் வருகிறது பாக்கியலட்சுமி. தற்போது இந்த சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் பாக்கியாவின் மகள் நடமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகம் கவனம் பெற்றது.
Advertisment
இந்த சீரியலில் பாக்கியா சொல்லும் சோயா கோலா உருண்டையை முயற்சிக்க பலரும் நினைத்திருப்பார்கள். சிலர் குறிப்பு தெரியாமல் விட்டிருக்கலாம். ஆனால், சோயா கோலா உருண்டை தயார் செய்வது ஈஸியாகும். அதற்கான எளிய செய்முறையை இங்கு வழங்கி இருக்கிறோம்.
தேவையான பொருட்கள்
சோயா - ஒரு கப் சோம்பு - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 1 புதினா கொத்தமல்லி பொட்டுக்கடலை - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் கரம் மாசாலா - 1 டீஸ்பூன்
Advertisment
Advertisements
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரிசி மாவு கருவேப்பிலை
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் சுடு தண்ணீர் ஊற்றி சோயாவை ஊற வைத்துக் கொள்ளவும். 10 நிமிடங்களுக்கு நன்கு ஊற வேண்டும்.
இதன்பிறகு, ஒரு மிக்சி எடுத்து அதில் சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம் பாதியளவு, புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை, மிளகாய்த்தூள், கரம் மாசாலா சேர்த்து அரைக்கவும்.
பின்னர், அதனுடன் ஏற்கனவே ஊறவைத்துள்ள சோயா சேர்க்கவும். சேர்க்கும் அதனுள் இருக்கும் தண்ணீரை பிழிந்து எடுத்து விட வேண்டும். பிறகு அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, அரிசி மாவு சேர்த்து அரைக்கவும். அரைக்கும் போது கெட்டியாக வர வேண்டும். தண்ணீராக இருந்தால் சிறிதளவு பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்சியில் அரைத்தவற்றை உருண்டை உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். பின்பு கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்தல் சூடான சோயா கோலா உருண்டை ரெடி. நான்-வெஜ் கோலா உருண்டை சாப்பிடாத மக்கள் இதனை ஒருமுறை ட்ரை பண்ணலாம்.