ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் இருப்பவர்கள் 10 ரூபாய்க்கு சோயா வைத்து நான்வெஜ் ஸ்டைலில் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். சோயா மிளகு வறுவல் செய்முறை இந்தியன் ரெஸிபிஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள் :-
1 எல் தண்ணீர்
உப்பு
2 கப் சோயா சங்க்
1 தேக்கரண்டி சீரகம்
1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள்
1.5 தேக்கரண்டி மிளகு
3 கிராம்பு
3 ஏலக்காய்
2 இலவங்கப்பட்டை
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1 தேக்கரண்டி மல்லி தூள்
3 தேக்கரண்டி எண்ணெய்
2 நறுக்கிய வெங்காயம்
உப்பு
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
2 நறுக்கிய தக்காளி
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை
எப்போதும் போல சோயாவை உப்பு போட்ட சுடுதண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகு ஆகியவற்றை சேர்த்து பவுடராக அரைத்து அதில் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் மேலே சிறிது உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கி விடவும்.
அடுத்ததாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைத்து அதில் சிறு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கறி வருவலை மிஞ்சும் சுவையில் மீல் மேக்கர் கிரேவி | Meal Maker Gravy in Tamil | Soya Chunk Recipe
எண்ணெய் பிரிந்து தொக்கு பதத்திற்கு வந்ததும் அதில் சோயாவை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
எண்ணெய் மீண்டும் பிரிந்து வந்ததும் மேலே கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கி சாப்பிட ஆரம்பிக்கலாம். நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.