எப்போதும் போல கேசரி செய்யாமல் இந்த முறை இன்னும் கொஞ்சம் டேஸ்ட் கூடுதலாக செய்ய ரேகாஸ் கிட்சன் ரெசிப்பீஸ் யூடியூப் பக்கத்தில் கூறும் இந்த சின்ன டிப்ஸ்சை ஃபாலோ செய்யலாம்.
Advertisment
பால் கேசரி மிகவும் ரிச்சாகவும் டேஸ்டியாகவும் வாயில் வைத்ததும் கரையும் அளவிற்கு எப்படி செய்வது என்று பார்ப்போம். அடிக்கடி இந்த கேசரி செய்ய முடியவில்லை என்றாலும் ஏதாவது விசேஷ நாட்களில் செய்யலாம். கொஞ்சம் சாப்பிட்டாலே திகட்டிவிடும். அந்த அளவுக்கு இந்த பால் கேசரி தித்திப்பாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
நெய் முந்திரி ரவை பால் சர்க்கரை குங்குமப்பூ ஏலக்காய் தூள்
Advertisment
Advertisements
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.
பின்னர் அதே நிலையில் ரவையை சேர்த்து நிறம் மாறாமல் மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் பால் சேர்த்து மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை கலந்து விட்டுக் கொண்டே இருக்கவும்.
கட்டி விழக்கூடாது. பின்னர் நன்கு வெந்து கெட்டியாகி வந்ததும் அதில் சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். மசித்து மசித்து கிளற வேண்டும் அப்போதுதான் கட்டி விழாமல் இருக்கும்.
அந்த சர்க்கரை உருகி வரும் தண்ணீரிலேயே கேசரி அல்வா மாதிரி ரெடி ஆகிவிடும். பின்னர் கடைசியாக நெய் சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.