இன்னைக்கு சண்டே:  வீடே மணக்கும் மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க

ரொம்ப ஈசியா இந்த மட்டன் கிரேவியை செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

ரொம்ப ஈசியா இந்த மட்டன் கிரேவியை செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மட்டன் கிரேவி

மட்டன் கிரேவி

ரொம்ப ஈசியா இந்த மட்டன் கிரேவியை செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.  

Advertisment

தேவையான பொருட்கள்

1 கிலோ மட்டன்

2 பெரிய வெங்காயம் நறுக்கியது

Advertisment
Advertisements

2 தக்களி

3 சிட்டிகை மஞ்சள் தூள்

1 அரை ஸ்பூன் மிளகாய் தூள்

10 பல் பூண்டு

கொஞ்சம் இஞ்சி

2 பச்சை மிளகாய்

கிராம்பு, பட்டை, ஏலக்காய்

உப்பு

2 கப் தண்ணீர்

வெண்ணை

அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

அரை ஸ்பூன் சீரகத் தூள்

ஒரு ஸ்பூன் மல்லித் தூள்

அரை ஸ்பூன் கரம் மசாலா

அரை ஸ்பூன் மிளகு தூள்

செய்முறை: முதலில் மட்டனை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்க வேண்டும். தொடர்ந்து அதை குக்கரில் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியின் அடிப் பகுதியை நீக்கிவிட்டு சேர்த்து கொள்ளுங்கள். தொடர்ந்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி,  பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, ஏலக்காய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து 6 விசில் வரை விட்டு எடுத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் வேகவைத்த இந்த கலவையில் உள்ள தக்காளியின் தோலை மட்டும் நீக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்க்கவும், தொடர்ந்து அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும், தற்போது மட்டன் கலவையை சேர்த்து, அதில் சீரகப்பொடி, மல்லித் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து கிளரவும். கிட்டதட்ட 15 நிமிடங்கள் மட்டன் கிரேவியை தீயில் வைக்க வேண்டும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: