சாதாரணமாக இருக்கும் அனைத்து விதமான சட்னிகளை சாப்பிட்டு சலித்து விட்டதா? கவலையே வேண்டாம், இந்த சின்ன வெங்காயம் கார சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு ஒரு புதிய சட்னி ரெசிபி கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
காய்ந்த மிளகாய்கள்,
பூண்டு,
சின்ன வெங்காயம்,
புளி,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி,
கல் உப்பு,
கடுகு மற்றும்
உளுந்து.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன் பின்னர், 5 காய்ந்த மிளகாய்கள், 5 பூண்டு, 200 கிராம் சின்ன வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் சின்ன வெங்காயத்தின் நிறம் மாறியதும் ஊறவைத்த சிறிதளவு புளியை சேர்த்து வதக்கலாம். இதையடுத்து, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலக்க வேண்டும். அதற்கடுத்து அடுப்பை ஆஃப் செய்து விடலாம்.
இந்தக் கலவை முற்றிலும் ஆறிய பின்னர், இதனை கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனிடையே, அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்.
இப்போது, தாளிப்பை அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் சேர்த்து கலந்தால், சூப்பரான சின்ன வெங்காயம் கார சட்னி ரெடியாகி விடும். சற்று வித்தியாசமான சட்னி எதிர்பார்ப்பவர்களுக்கு, இது ஏற்றதாக இருக்கும்.