காய்ச்சிய பாலில் முருங்கைப்பூ; வேக வைத்த முட்டையில் சிலாசத்து... விந்தணு அதிகரிக்க டாக்டர் யோகா வித்யா டிப்ஸ்
"முருங்கைப்பூ-வை பாலில் காய்ச்சிய பிறகு அத்துடன் 2 பிஞ்ச் ஜாதிக்காய் பூ சேர்த்து தொடர்ந்து 48 நாள்கள் பருகி வர வேண்டும். இதன்பிறகு, செக் செய்து பார்த்தால் விந்தணுக்கள் அதிகரித்து இருக்கும்." என்று டாக்டர் யோகா வித்யா கூறியுள்ளார்.
"ஆலமரத்தில் இருக்கும் விழுது, பழம், கொழுந்து ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்துக் கொள்ளவும். அதனை இளைத்து பாலில் கலந்து பருகி வரலாம்." என்று டாக்டர் யோகா வித்யா கூறியுள்ளார்
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய மன அழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக உள்ளன. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் ஆண் குழந்தைகளின் உடலில் விந்தணு உற்பத்தியின் செயல்முறை நிற்பதில்லை.
Advertisment
வயதுக்கு ஏற்ப ஆண்களின் விந்தணுக்களில் மரபணு மாற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, விந்தணு டி.என்.ஏ சேதமடையும் ஆபத்து அதிகரிக்கிறது. இதனால், ஆண்கள் தந்தையாகும் வாய்ப்பும் பல மடங்கு குறைகிறது. இருப்பினும், சில ஆயுர்வேத நடைமுறைகள் மூலம் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம்.
அந்த வகையில், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க டாக்டர் யோகா வித்யா சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக எத்னிக் ஹெல்த்கேர் டாக்டர்.பி.யோகா வித்யா எனும் யூடியூப் சேனலில் அவர் பேசுகையில், "விந்தணுக்களை அதிகரிக்கவும், சீக்கிரம் குழந்தை வேண்டும் என்பவர்களும் இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ண வேண்டும்.
முருங்கைப்பூ-வை பாலில் காய்ச்சிய பிறகு அத்துடன் 2 பிஞ்ச் ஜாதிக்காய் பூ சேர்த்து தொடர்ந்து 48 நாள்கள் பருகி வர வேண்டும். இதன்பிறகு, செக் செய்து பார்த்தால் விந்தணுக்கள் அதிகரித்து இருக்கும்.
Advertisment
Advertisements
ஆலமரத்தில் இருக்கும் விழுது, பழம், கொழுந்து ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்துக் கொள்ளவும். அதனை இளைத்து பாலில் கலந்து பருகி வரலாம். அல்லது மூன்றையும் நன்கு காய வைத்து பொடியாக அரைத்து பாலில் போட்டு பருகி வரலாம். இதனை 48 நாள்கள் காலை மற்றும் இரவு பருகி வர வேண்டும்.
இதேபோல், ஆள் மற்றும் எடைக்கு ஏற்ப சிலாசத்து பற்பாம் 1 முதல் 3 கிராம் எடுத்து அதனை வேக வைத்த முட்டையின் நடுவில் வைத்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.