இனி குழம்பு செய்ய யோசிக்க தேவை இல்லை வெறும் தேங்காய் மட்டும் போதும் சட்டுன்னு காரசாரமான ஒரு சைடிஷ் செய்திடலாம்.
தேவையான பொருட்கள்
புளி
உப்பு
தேங்காய்
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை
சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம்
நெய் அல்லது நல்லெண்ணெய்
ஒரு குட்டி பவுலில் நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் நறுக்கிய தேங்காயை பொறித்து எடுக்க வேண்டும். தேங்காய் சிறியதாக நறுக்க வேண்டும். அப்போதுதான் வறுபட ஈஸியாக இருக்கும்.
அதே எண்ணெயில் காரத்திற்கு தகுந்தாற்போல வர மிளகாயை லேசாக வறுக்க வேண்டும். பின்னர் பூண்டு சிவந்து வரும்வரை பொறித்து எடுக்க வேண்டும். பின்னர் அதேபோல கருவேப்பிலையையும் சேர்த்து பொறித்து எடுக்க வேண்டும்.
இவை அனைத்தையும் ஆற வைத்த அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து புளி கரைசல் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அதிக தண்ணீர் சேர்க்க கூடாது. இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம்,சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து விடவும்.
பின்னர் இதனை உருண்டை பிடித்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளலாம். ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதை சூடான சாதம், இட்லி, தோசை எதுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“