காரசாரமான மற்றும் சூப்பரான நாட்டுக்கோழி மிளகு கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சமைக்க தெரியாத பேச்சுலர்ஸ் கூட இந்த டிஷ் ட்ரை பண்ணலாம். கார்த்திஸ்குக்புக் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
கருவேப்பிலை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
நாட்டுக்கோழி - 300-400 கிராம்
தக்காளி - 2 (நறுக்கியது)
தண்ணீர் - 1.5 கிளாஸ்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கல்லுப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
முதலில், ஒரு சட்டியில சீரகம், வரமல்லி, மிளகு, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, பவுடராக அரைத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள். அதே சட்டியில மூன்று டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, 20 சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான அளவு கருவேப்பிலையும், ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு, 300 முதல் 400 கிராம் நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இரண்டு தக்காளியை நறுக்கிச் சேர்த்து, ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள்.
ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் கல்லுப்பு சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து சுண்ட விடவும்.
கிரேவி சுண்டியதும், இரண்டு பச்சை மிளகாயைச் சேர்த்து, முன்னரே அரைத்து வைத்த மசாலா பவுடரையும் போட்டு நன்கு கலக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும்.
அவ்வளவுதான், ஒரு சூப்பரான நாட்டுக்கோழி மிளகு கிரேவி தயார். இந்தக் குழம்பு உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.