ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த முளைக்கட்டிய பயறு கொண்டு தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முளைக்கட்டிய பயறு- அரை கப்
தோசை மாவு- 1 கப்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இப்போது இதை தோசை மாவுடன் கலக்கவும். அடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் எப்போதும் போல் தோசை ஊற்றவும். தோசை சற்று தடிமனாக வரும். தோசை சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். விருப்பமான சட்னி வைத்து சூடாக தோசை பரிமாறவும். அவ்வளவு தான்
முளைப் பயறு தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“