பயறு வகைகள் எப்போதும் உடல் நலத்திற்கு சிறந்தது. அதுவும் முளைக்கட்டிய பயறுகளில் அதிக சத்து நிறைந்துள்ளது. அந்த வகையில் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் முளைக்கட்டிய பயறு சூப் குடித்து வர பலன் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேவையான பொருட்கள்
முளைக்கட்டிய பயறு கலவை - 1 கப் ( விருப்பமான பயிறுகளை எடுத்துக் கொள்ளலாம்)
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு , மிளகுத்தூள் - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் முளைக்கட்டிய பயறை வேக வைக்கவும். வேக வைத்த பயிறில் சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பயறை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகி வந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த பயிறு விழுது உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். அடுத்து மிளகுத்தூள், தனியாக எடுத்து வைத்த பயறு சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான் சுடச் சுடச் சுவையான முளைக்கட்டிய பயறு சூப் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“